--- --:--:-- --

விஜயகாந்த முன்னிலையில் தேமுதிக நேர்காணல் இன்று தொடக்கம்!

dmdk

தமிழக சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்குகிறது; தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. சட்டசபைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தற்போதும் தொடர்வதாக இரு கட்சிகளும் கூறி வந்தாலும், இன்னமும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னமும் தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு எட்டுவதில் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

 

இது ஒருபுறம் இருந்தாலும், சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று தொடங்கி, வரும் 8ம் தேதி வரை, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.

 

இன்று காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி; மதியம் 2 மணிக்கு கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, நாளை (7ம் தேதி), காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி; மதியம் 2 மணிக்கு தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு மாவட்டத்தினருக்கும் நேர்காணல் நடைபெறும்.

 

நிறைவு நாளான வரும் 8ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம்; மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்தில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon