பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..!
அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பாஜகவில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அந்த கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பாஜகவில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு ஏற்கனவே 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.






