தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அசாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் தேயிலையைப் பறித்தும், அவர்களுடன் அமர்ந்து உரையாடியும் வாக்கு சேகரித்த சட்டப்பேரவை நடைபெற்று வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விஸ்வநாத் பகுதியில் உள்ள சாதூர் என்ற தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்களுடன் தலையில் கூடை மாட்டியபடி இலைகளை பறித்துப் போட்டு மகிழ்ந்துள்ளார். மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் அமர்ந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.






