--- --:--:-- --

ஓய்வுபெற்ற பேருந்து நடத்துனராக ஏமாற்றி 45 லட்சம் ரூபாய் மோசடி..!

3

ய்வுபெற்ற பேருந்து நடத்துனராக ஏமாற்றி 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் நாகை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நாகை அருகே உள்ள பால் பண்ணை பகுதியில் வசித்து வந்த சுப்ரமணியன் அங்குள்ள விநாயகர் கோவிலை பராமரித்து வந்துள்ளார்.

 

அங்கு வழிபட வந்து சென்ற ராமகிருஷ்ணன் அவரது மகன் ராஜேஸ்வரி ஆகியோர் சுப்பிரமணியன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளனர். அவரிடம் பெருமளவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி அதனை அபகரிக்க திட்டமிட்டு உள்ளார்.

 

தங்களது பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று உள்ளதாகவும் அந்த தொகையை வருமான வரித்துறையினர் வசம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதனை நீக்க 45 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறி சுப்பிரமணியனை நம்ப வைத்து ராஜேஸ்வரி பணத்தை வாங்கியுள்ளார்.

 

மேலும் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என ராஜேஸ்வரி தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து அவர்கள் வருமான வரித்துறையினர் எனக் கோரி சுப்பிரமணியனிடம் 60 சவரன் நகைகளையும் வாங்கி சென்று விட்டார். பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தராததால் சந்தேகமடைந்து சுப்பிரமணியன் நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon