--- --:--:-- --

பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல : ராகுல் காந்தி

2

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றுவது கடினமான செயல் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தி ஆலங்குளம் பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குளம் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் இருந்த பரபரப்பை செய்துள்ளார்.

 

74 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர் அதே போன்று பாஜக ஆட்சியை அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத்தை பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

 

பரப்புரையின் போது கடைக்கு சென்று தேநீர் அருந்தி அவர் அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் பேசியுள்ளார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon