--- --:--:-- --

உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் 62பேர் உடல்கள் மீட்பு..!

3

த்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 62 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தின் ஜோசிடம் அருகே நந்தாதேவியின் பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7ஆம் தேதி உடைந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் ஆற்றில் பெரும் பிரளயமே ஏற்பட்டு அதில் ரிஷிமிங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. தவோவன், விஷ்ணுகாட் அனல்மின் நிலையங்களும் சேதமடைந்தன. அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன் பலரும் சுரங்கங்களில் சிக்கிக்கொண்டனர்.

 

ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை என்று ஏராளமானோர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதுவரை 62 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 28 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு இருப்பதாக டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார். பல இடங்கள் இன்னும் சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்பு பணி மிகப் பெரும் சவாலாகவே உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon