--- --:--:-- --

பத்திரிக்கையாளர் பிரியா ரமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

2

பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான எம்ஜெ  அக்பருக்கு எதிராக தொடுத்த கிரிமினல் அவதூறு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பெண்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட தொல்லைகளை மீடு என்றே ஹேஸ்டெக்கின் கீழ் குறிப்பிட்டு வந்தனர்.

 

இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மூத்த பத்திரிக்கையாளர் எம்ஜெ அக்பர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பத்திரிக்கையாளர் பிரியா ரமணியும் மீடு ஹேஸ் டேக்கில் பதிவிட்டு இருந்தார். பின்னர் வேறு பல பெண்களும் எம்ஜெ அக்பர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் பிரியாரமணி தன் மீது அவதூறு பரப்புவதாக வழக்கு தொடுத்தார்.

 

இதை விசாரித்த நீதிமன்றம் அக்பர் மீது பிரியாரமணி அவதூறு பரப்பினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக பெண்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

 

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்கள் பலரும் புகார் அளிக்க முன்வருவதில்லை இதை அகற்ற புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon