வீட்டில் பேய் உள்ளது..! போலீசாரிடம் புகார் அளித்த பெண்..!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வாழும் பெண் ஒருவர் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். தன் வீட்டில் ஏசி ஆன் செய்யப்பட்டு இருப்பதையும் வீட்டின் பின்கதவு திறந்து இருப்பதையும், சமையலறையில் பாதி சமைக்கப்பட்ட நிலையில் மாமிசம் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார்.
இருந்தாலும் விட்டுவிட்டார். ஆனால் மற்றொரு நாள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் இடம் மாறியிருந்தது. அடுத்த நாள் இரவு ஒரு உருவம் வந்து பிரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து குடிப்பதையும் பார்த்துள்ளார்.
ஆனால் உரிமையாளர் வருவதைக் கண்ட அந்த உருவம் கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே பறந்து விட்டதாம். இதையெல்லாம் கண்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
வீட்டிற்கு வந்த போலீசார் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அந்த வீட்டின் மேற்கூரையில் உள்ள ஒரு ஓடு விலகி இருந்ததை கண்டுபிடித்தனர். அப்போதுதான் தெரிந்தது அந்த உரிமையாளர் பார்த்ததே பேயேயில்லை, ஒரு பெண்தான்.






