சுற்றுலா வாகனத்தில் இருந்த விஷப்பாம்பு..!
கொடைக்கானல் சுற்றுலா வாகனத்தில் முன் பகுதியில் நான்கடி விஷப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் பிடிபட்டது. மூஞ்சிகள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சுற்றுலா வாகனத்தின் முன் பகுதியில் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு நுழைந்து கொண்டது.
தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வனப் பகுதியில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.






