கூட்டுறவு கடைகளில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதாவது, வெற்றிப் பயண திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் என பல திட்டங்களை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 வகையான காய்கறிகள் அடங்கிய இந்த தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்க செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், பூங்கா நகர், காஞ்சிபுரம், வடசென்னை மற்றும் மதுரை கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தக் காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை நடைபெறுகிறது.
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு
வெங்காயம் – 500 கிராம்
தக்காளி – 500 கிராம்
கத்தரிக்காய் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
கேரட் – 200 கிராம்
பீன்ஸ் – 200 கிராம்
பச்சை மிளகாய் – 100 கிராம்
எலுமிச்சை – 100 கிராம்
இஞ்சி – 50 கிராம்
தேங்காய் – 400 – 450 கிராம்
மொத்தம் – 2550 – 2600 கிராம்
ஒரு காய்கறித் தொகுப்பும் ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





