--- --:--:-- --

லிப்ட் கொடுத்தவரை அடித்து உதைத்து பைக், செல்போன் பறிப்பு..!

2

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிப்ட் கொடுத்தவரை அடித்து உதைத்து பைக், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கீழகல்லூரணியை சேர்ந்த முத்து சீதாராமனை கடந்த 30ஆம் தேதி இரவு திட்டங்குளம் அருகே வழிமறித்த மூன்று பேர் கடைசி பேருந்தை தவறவிட்டு விட்டதாகவும் எட்டயபுரம் வரை கொண்டு சென்று இறக்கிவிடுமாறும் கேட்டுள்ளனர்.

 

கொஞ்ச தூரம் சென்றதும் பைக்கை நிறுத்தி முத்து சீதாராமனை தாக்கிவிட்டு அவரது செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரது பைக்கிலேயே தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை செய்து வந்த போலீசார் வேலாயுதபுரம் அருகே வாகன சோதனையில் வழிப்பறி கும்பலை மடக்கி கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon