அலெக்ஸாண்டர் பாரகிட் பச்சைக்கிளியை விற்பனை செய்ய முயன்ற இரு இளைஞர்கள்.!
கோவை பொள்ளாச்சி அருகே விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள அலெக்ஸாண்டர் பாரகிட் என்ற மலைவாழ் பச்சைக்கிளியை விற்பனை செய்ய முயன்ற இரு இளைஞர்கள் வனத்துறையிடம் சிக்கியுள்ளனர்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் வைத்து இவை விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிளிகளுடன் சிக்கிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் தலா 25 ஆயிரம் ரூபாய் என 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் கோவை வனச்சரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.






