--- --:--:-- --

சிஏ தேர்வில் சேலத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து சாதனை..!

19

ந்திய அளவில் நடைபெற்ற சிஏ தேர்வில் சேலத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பட்டிய கணக்காளர் தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

 

சி‌ஏ தேர்வில் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 800 மதிப்பெண்களுக்கு 553 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிஏ தேர்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார். தற்போது மாணவர் இசக்கி ராஜா முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon