திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஐஸ் விற்ற நடிகர் சமுத்திரகனி..!
திருத்தணி முருகன் கோவிலில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி சாமி தரிசனம் செய்தார். தைப்பூசத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியும் திருத்தணி முருகனை தரிசனம் செய்தார். திரைப் பட பூஜையில் பங்கேற்பதற்காக வந்த அவர் திரைப்படம் வெற்றி பெறவும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகனைத் தரிசித்துள்ளார்.
மலையடிவாரத்தில் கோயில் திருக்குளம் அருகை கூடிய ரசிகர்களுடன் சமுத்திரகனி செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.






