--- --:--:-- --

தனது 17 வயது மகனுக்கு ஸ்கூட்டி ஓட்ட கொடுத்த தாய்க்கு தண்டனை மற்றும் அபராதம்..!

4

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நண்பனை அழைத்துக்கொண்டு தனது தாயாரின் ஸ்கூட்டியில் சென்றுள்ளார். காந்திபுரம் பகுதியில் சென்றபோது பேருந்து மோதியதில் ஸ்கூட்டி பின்னால் அமர்ந்திருந்த நண்பனான 16 வயது சிறுவன் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

 

இது தொடர்பாக கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 18 வயது நிரம்பாத சிறுவன் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உரிமையாளரான அவனது தாயார் பாண்டீஸ்வரி மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாஜிஸ்ட்ரேட் ராமதாஸ் 2019ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டப்படி வாகன உரிமையாளரான பாண்டீஸ்வரி கோர்ட் கலையும் வரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து ஒருநாள் தண்டனையுடன் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

இதைத்தொடர்ந்து பாண்டீஸ்வரி கடந்த 26ஆம் தேதி காலை முதல் மாலை வரை நீதிமன்றம் குற்றவாளி கூண்டில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டார். தங்கள் மகன்கள் கையில் இரு சக்கர வாகனத்தை கொடுக்கும் பொறுப்பற்ற பெற்றோருக்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை பாடம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon