திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம்..!
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அமலில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. கொரொனா தொற்று காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்றி திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அனுமதிக்கலாம் என்றும் இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசுகள் வெளியிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.






