மகளின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய தந்தை..!
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாமக்கல் வந்த தனது மகளின் பிறந்தநாளை கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து வந்து கொண்டாட செய்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
நாமக்கல் நகரில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வட்டமிட்டதால் பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர். பள்ளி மைதானத்தில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் முன் அந்த பெண் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அதன்பின் அவர்கள் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டு செல்கின்றனர்.






