மெரினா கடற்கரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செல்பி மையம்..!
சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில் புதிதாக செல்பி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் அடையாளமாக இருக்கும் வழியாக கடற்கரைக்கு இந்த செல்ஃபி ஸ்பார்க் இனி புதிய அடையாளம்.
உள்ளூர் சுற்றுலா பயணிகளும் முதல் வெளிநாட்டினர் யார் சென்னை வந்தாலும் அவர்கள் செல்லும் இடமாகியுள்ளது. இங்கு சென்னையில் பெருமையையும் அதன் அடையாளத்தையும் போற்றும் விதமாக நம்ம சென்னை என்ற அடையாளத்துடன் கூடிய செல்பி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த செல்ஃபி மையத்தை திறந்து வைத்துள்ளார். முதல் நாளிலேயே பொது மக்கள் உற்சாகமாக இங்கு புகைப்படம் எடுக்க குறித்துள்ளனர். 24 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி இதனை வடிவமைத்துள்ளது.
மெரினாவுக்கு சென்றதற்கான அடையாளமாக சமூக வலைதளங்களில் பலர் இங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட இனி நாம் காணமுடியும். இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் பராமரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.






