360 மீட்டர் உயரம் கொண்ட செங்குத்தான கட்டிடத்தில் ஏறி ஒருவர் சாதனை..!
மத்திய ஐரோப்பாவின் பால்கன் நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் 360 மீட்டர் உயரம் கொண்ட செங்குத்தான கட்டிடத்தில் ஏறி ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்தநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ட்ரோபோல்ஜியில் உள்ள உயரமான செங்குத்தான கட்டடத்தில் ஏறும் போட்டி நடைபெற்றது. கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்தான இந்த சாகச போட்டியில் ஸ்லோவேனியாவின் ஜனா காம்ரெட்ஸ் மிகவும் லாவகமாக ஏறி உச்சியை எட்டினார்.
ஏற்கனவே அவர் ஆறு முறை இந்த உச்சியை எட்டி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். தோமைன்ஸ் காபிக் என்ற மற்றொரு வீரரும் உச்சியை எட்டி முத்திரை பதித்துள்ளார்.






