ஹமீத் அன்சாரியிடம் நரேந்திர மோடி கேட்ட கேள்வி..!
மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட போது கூச்சல் குழப்பத்திற்கிடையில் மசோதாக்களை நிறைவேற்ற ஏன் அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தன்னை கேள்வி கேட்டதாக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துக்கொண்டார்.
பை மெனி ஹேப்பி ஆக்சிடென்ட் என்ற புத்தகத்தை ஹமீத் அன்சாரி எழுதியுள்ளார். ஒருநாள் எந்தவித அறிவிப்பும் இன்றி பிரதமர் தனது அலுவலகத்திற்கு வந்ததாக ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். அவையில் கூச்சல் குழப்பம் நிலவும் போது சட்டங்களை நிறைவேற்ற ஏன் அனுமதிக்கவில்லை என பிரதமர் கேட்டதாக ஹமீத் அன்சாரி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ஏற்பட்ட சவால் நிறைந்த தருணங்கள், பாஜகவின் எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றை அன்சாரி அந்த புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.






