--- --:--:-- --

தவறான சிகிச்சையால் உயிரிழந்த நாயின் உடல் பிரேத பரிசோதனை..!

7

தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோரி உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கால்நடைத்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

9 வயதில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமாவுக்கு சென்றுவிட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

 

பின் நாயை பரிசோதித்த கால்நடை மருத்துவமனை மருத்துவர் தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில் கடந்த டிசம்பரில் நாய் இறந்து விட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

 

நாயின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேதப் பரிசோதனை செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு வரும் 1-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon