--- --:--:-- --

விடுதலை பத்திரம் ஒப்படைக்கப்பட்டு சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்..!

8

சிகலா நான்காண்டு கால சிறை தண்டனை முடிந்து இன்று காலை பத்து முப்பது மணி அளவில் விடுதலையாகியுள்ளார். விடுதலை பத்திரத்தை சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

சசிகலாவுடன் விக்டோரியா மருத்துவமனையில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் உள்ளனர். சிறை தலைமை கண்காணிப்பாளர் கேசவமூர்த்தி விடுதலை பத்திரத்தை வழங்கியுள்ளார்.

 

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா 4 ஆண்டு காலம் சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகி உள்ளார். இதனையடுத்து விக்டோரியா மருத்துவமனை முன்பு அமமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon