--- --:--:-- --

கேரளாவில் அதிகரித்துள்ள கொரொனா தொற்று..!

7

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்மாதிரி என்று பாராட்டப்பட்ட கேரளா தற்போது அதிக பாதிப்புகள் உள்ள மாநிலமாக மாறியுள்ளது, பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்படும் சராசரி என்பது மற்ற மாநிலங்களை விட கேரளாவில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது .

 

ஓணம் பண்டிகைக்காக தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள், செப்டம்பரில் திறக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள் டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் போன்றவை கேரளாவில் கொரொனா தொற்று பெரிதும் அதிகரிக்க காரணங்கள் ஆக மாறியுள்ளது.

 

தற்போது கேரளாவில் மொத்த கோரணா பாதிப்பு ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. சிகிச்சையில் 70 ஆயிரத்து 524 பேர் உள்ளனர். கேரளாவில் நோய் பரவல் அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கூறினார். விதிகளை மறுசீராய்வு செய்யவும் கேரள அரசை இந்திய மருத்துவ கழகம் வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் பரிசோதனை முறை கடைப்பிடிப்பதும் நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

 

கேரளாவில் 66.5 சதவீதம் பரிசோதனைகள் நடக்கின்றன. இந்த பரிசோதனைகள் மூலம் 50 சதவீதம் தான் உறுதியான முடிவு தெரியும் என்ற நிலையில் பரிசோதனைகளில் நெகட்டிவாக வீடு திரும்புவோர் மூலம் நோய் பரவ அதிகமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon