இந்தியாவில் 8 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் மத்திய அரசு ஆறு நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்த இருப்பதாக கூறியுள்ளது.
10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அமெரிக்காவில் 10 நாட்களும், பிரிட்டனில் 18 நாட்கள் ஆன நிலையில் இந்தியா 6 நாட்களில் அந்த எண்ணிக்கை தொட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீரம் கோவிஷீல்டு மற்றும் பயோடெக் நிறுவனம் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன.

மேலும் செய்திகள் :
விஜயநகரப் பேரரசு காலத்து சிலைகள் மீட்பு..!
கிளம்பாக்கம் ஆகாய நடைபாதையில் தொழில்நுட்பக் கோளாறு..!
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?






