அமெரிக்கா, பிரிட்டனை விட தடுப்பூசி போடும் பணியில் முந்தியது இந்தியா..!

ந்தியாவில் 8 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதுவரை 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் மத்திய அரசு ஆறு நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்த இருப்பதாக கூறியுள்ளது.

 

10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அமெரிக்காவில் 10 நாட்களும், பிரிட்டனில் 18 நாட்கள் ஆன நிலையில் இந்தியா 6 நாட்களில் அந்த எண்ணிக்கை தொட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீரம் கோவிஷீல்டு மற்றும் பயோடெக் நிறுவனம் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன.


நெற்றியில் வாலுடன் அதிசய நாய்க்குட்டி- சமூக வலைதளங்களை கலக்கும் புகைப்படங்கள்

அமெரிக்காவில், நெற்றியில் வாலுடன் நாய்க்குட்டி பிறந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதன் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இரட்டை தலையுடன் கன்றுக்குட்டி, ஆறு கால்களுடன் கால்நடை, ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போன்ற அதியச நிகழ்வுகளை அவ்வப்போது, பார்த்திருக்கிறோம். ஆனால், நெற்றில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டியை பார்த்திருக்கிறீர்களா?

அமெரிக்காவில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அங்குள்ள மிசோரி மாகாணத்தின் கான்சாஸ் நகரில், தெருவில் நாய்க்குட்டி ஒன்று நெற்றியில் வாலுடன் சுற்றிக் கொண்டிருந்தது.

 

இதுபற்றி தகவல் அறிந்து, தன்னார்வல கால்நடை பராமரிப்பு அமைப்பான மாக், அதை தந்தெடுத்து வளர்த்து வருகிறது. இந்த நாய்க்கு, தலையில் கொம்புள்ள திமிங்கல வகையின் பெயரான நார்வால் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன், அவரது மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார்.

 

அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு நாளை செல்லும் துணை முதல்வர், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறார். வரும் 10ஆம் தேதி சர்வதேச சமுதாய ஆஸ்கார் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

 

வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பி.எஸ். பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 17ஆம் தேதி ஓ.பி.எஸ். தமிழகம் திரும்புகிறார்.

 

அமெரிக்காவுக்கு புறப்படும் முன்பு, கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பி.எஸ். வீட்டிற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து தெரிவித்தார்.

 

அதேபோல், விமான நிலையத்தில் துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. அதிமுக தொண்டர்கள் திரளாக கூடி, துணை முதல்வரை வழி அனுப்பி வைத்தனர்.