--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்..!

3

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரும் தயக்கம் காட்டக்கூடாது என கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் இருந்து தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது.

 

முதல் கட்டமாக மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி போடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு லேசான பக்கவிளைவுகளை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தடுப்பூசியை செலுத்துவதில் யாரும் தயக்கம் காட்டக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon