--- --:--:-- --

ஆஸ்திரேலிய அரசுக்கு கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை..!

9

டக நிறுவனங்களின் செய்தி கட்டுரைகளை பயன்படுத்துவதற்கு பணம் வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் சர்ச் என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என கூகுள் எச்சரித்துள்ளது.

 

சர்ச் என்ஜின்களின் தேடல் முடிவுகளை செய்திகளை துணுக்குகளாக பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட செய்தி ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு உரிய பணம் வழங்க வேண்டும்.

 

தவறினால் மில்லியன் டாலர் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது.

 

இன்டர்நெட் மற்றும் சர்ச் என்ஜின் இயங்கும் முறைக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாகவும் தங்களது வருத்தகத்தையும், டிஜிட்டல் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் சர்ச் என்ஜின் பயன்பாட்டை நிறுத்த வரை தவிர வேறு வழியில்லை என்றும் கூகுள் நிர்வாகி எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon