--- --:--:-- --

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசு..!

13

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த வரும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு திறன் வாய்ந்த தொழில்நுட்பமே கண்டுபிடிக்கப்படவில்லை.

 

கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய நல்ல தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon