--- --:--:-- --

போதையில் போலீசாருடன் தகராறு செய்த வடமாநில பெண்..!

2

கால்மேல் கால் போட்டுக்கொண்டு சகட்டுமேனிக்கு போலீசிடம் ஆங்கிலத்தில் பேசி வம்பு இழுத்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது குடிகார பெண் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் இல் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்ததையடுத்து ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் போதை ஏற்றியுள்ளார்.

 

அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது ஜீப்பில் வெளியே வந்த நித்து சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த டிராவலர் வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார், போதையில் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களிடம் போதையில் தகராறு செய்துள்ளார்.

 

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் அந்த பெண் பிரிவினைவாதம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

தான் தமிழ்நாட்டிற்கு வந்ததே தவறு என்றும் இனி ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு வரப்போவதில்லை என்றும் ஏதோ மற்றவர்கள் தவறு செய்தது போல உளறினார் வடநாட்டு குடிகார பெண்.
நீண்ட நேரமாக நின்று முரண்டு பிடித்து அந்த பெண்ணின் செல்போனை பெற்ற போலீசார் அவரது நண்பர்களை வரவழைத்துள்ளனர்.

 

நண்பர்கள் சமாதானப் படுத்தியும் போலீசாரை எதிர்த்ததால் இளைஞர்கள் அவரை ரவுண்டு கட்ட ஆவேசமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போதையில் உளறி கொட்டி அந்த பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

 

போலீசார்அந்தப் பெண் ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காலையில் போதை தெளிந்து பெற்றோரிடம் அந்தப் பெண் வாயை பொத்திக் கொள்ளும் அளவுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon