--- --:--:-- --

ஜேபி நட்டா வரும் 29ஆம் தேதி புதுச்சேரி செல்கிறார்..!

3

ட்சியை பலப்படுத்தவும் முக்கிய பிரமுகர்களை பாரதிய ஜனதாவில் இணைக்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கவும் ஜேபி நட்டா வரும் 29ஆம் தேதி புதுச்சேரி செல்கிறார்.

 

இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி செல்லும் அவர் 30-ஆம் தேதி ஏ‌டி‌எஃப் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கு பெறுகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்ற முழக்கத்தோடு பாஜக கூட்டணி கட்சிகளுடன் களமிறங்க உள்ளது.

 

துணைநிலை ஆளுநர், புதுச்சேரியில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் கூறிவரும் நிலையில், அதை வைத்தே பதிலடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சர் உட்பட சில எம்‌எல்‌ஏக்கள் பாஜகவில் இணைய கூடும் என்றும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon