--- --:--:-- --

பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதீர்கள்..!

11

வாட்ஸ்அப் மட்டுமல்ல அனைத்து செயலிகளும் பயனாளர்களின் தகவல்களை திரட்டுவதாக கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டேட்டா பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளது.

 

வாட்ஸ்அப் இன் புதிய பிரைவசி பாலிசி தனிநபர் அந்தரங்கம் உரிமைக்கு எதிராக உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாராறுக்கு வாட்ஸ்அப் பிரச்சனை என்றால் வேறு செயலிக்கு மாறிக் கொள்ளலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஸ்னஸ் கணக்குகளுக்கு மட்டுமே பாலிசி மாற்றங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon