--- --:--:-- --

தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

7

மிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

 

அதிகளவாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஐந்து சென்டி மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ஆம் தேதி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon