--- --:--:-- --

தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக குறைவு..!

12

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை 39.000 ரூபாயை தாண்டியது.

 

இருப்பினும் அதற்கு அடுத்து வந்த மூன்று வர்த்தக நாட்களில் தங்கம் விலை படிப்படியாக தொடர்ந்து சரிந்து வந்தது. இதன்படி நேற்று சவரன் தங்கம் 37 ஆயிரத்து 600 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,700 ரூபாயாகவும் இருந்தது.

 

இந்த நிலையில் 4வது நாளாக இன்றும் ஒரு கிராம் தங்கம் 38 ரூபாய் குறைந்து 4,662 ரூபாயாகவும், சவரன் தங்கம் 304 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இதேபோல் நேற்று 69 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை இன்று 900 ரூபாய் குறைந்து 68 ஆயிரத்து 100 ரூபாயாக விற்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon