--- --:--:-- --

கொரோனா தடுப்பு ஊசி விநியோகம் இன்று முதல் துவக்கம்..!

1

கொரோனா தடுப்பு ஊசிகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரும் 13ஆம் தேதி முதல் நாடெங்கும் உள்ள முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது.

 

அவசரகால தேவைகளுக்காக மட்டும் இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தது.இந்தநிலையில் தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணிகள் இன்று தொடங்கும் என்றும் இதற்கான விரிவான திட்டங்களை அரசு வகுத்துள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து சரக்கு மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் தடுப்பூசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உள்ளனர். இதைத்தொடர்ந்து அவசியம் கருதி பயணிகள் விமானங்களிலும் தடுப்பூசிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தென்னிந்தியாவைப் பொருத்தவரை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மையமாக வைத்து தடுப்பூசி பணிகள் நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon