--- --:--:-- --

தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்த போது கண்ணீர் விட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்..!

9

ஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

 

ஹைதராபாத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகமது கவுஸ் என்பவரின் மகனான முகமது சிராஜ் தனது அசாத்திய திறமையால் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

 

அவரது தந்தை கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நுரையீரல் நோயினால் இருந்த போதிலும் தாயகம் திரும்ப முடியாமல் இந்திய அணிக்காக விளையாடி வந்த சிராஜ் தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் பெருமை அடைவதாக கூறியிருந்தார்.

 

இதனிடையே சிட்னியில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முன்பாக இந்திய தேசியகீதம் பாடிக்கொண்டிருந்த சிராஜ் திடீரென கண்ணீர் விட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon