கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆரம்ப காலத்தில் வார நாட்களில் 2 ஆயிரம் பேரும்,வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தினமும் 5 ஆயிரம் பேரை தரிசனத்திற்காக அனுமதிக்க கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் கேரளாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக கேரள அரசு பக்தர்களை அனுமதிக்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேலும்,சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது.இந்த நிலையில் கேரள தேவசம் போர்டு தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கேரள அரசு பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்கள் கோவிட் 19 இல்லை என்ற சான்றிதழ்( 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவு ), ஆன்லைன் தரிசன முன்பதிவு,ஆதார் அட்டை நகல் ( அசல் ) உள்ளிட்ட 3 ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக கேரள மாநிலம் நிலக்கல்லில் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு கோவிட் 19 இல்லை என்ற சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.இதனையடுத்து ஆன்லைன் தரிசனம் முன்பதிவு டிக்கெட் பார்கோடு மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதே போல் பம்பையில் கன்னிமூல கணபதி கோவிலில் இருந்தும் இதே போல் இந்த மூன்று ஆவணங்களும் சரிபார்க்கப்படுகிறது.
மேலும்,உடல் வெப்பநிலை பார்க்கப்பட்டு சானிடைசர் கைகளில் தெளிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.இல்லையென்றால் திருப்பியனுப்பப்படுகின்றனர். மேலும்,பம்பையில் பம்பா நதியில் குளிக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு,அதற்கு பதிலாக ஷவர் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.முக க்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் முடிவு தெரிய இரு நாட்கள் ஆகி விடுகிறது.மண்டல பூஜை சமயத்தில் செல்போன் குறுஞ்செய்திமேலும்,கேரள அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஏற்றுகொள்வதில்லை.
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா முடிவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் லேப்புகளில் ரூ.2300 முதல் ரூ.3900 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகளில் கொரோனா முடிவுகள் வழங்குவதில் தாமதமாகும் நிலை தற்போது இருந்து வருவதால் தனியார் லேப்புகளுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
முடிவுகளும் விரைவாக வழங்கப்பட்டு வருவதால் ஐயப்ப பக்தர்களும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் லேப்புகளுக்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.ஏற்கனவே கேரள அரசின் ஆன்லைன் பாஸ்களுக்காக அலைந்து வரும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறவும் கட்டணம் செலுத்த வேண்டுமா ? என்றும் கேள்வியெழுப்புகின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.