இந்தியாவில் உருமாறிய கொரொனா பெருந்தொற்றால் 58 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்..!

ருமாறிய கொரொனா பெருந்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பரவிய அதிதீவிர உருமாறிய பெருந்தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்புபவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் இதுவரை 58 பேருக்கு கொரொனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். உருமாறிய பெருந்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


Leave a Reply