ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

யிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எருக்கண்டாச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமகுரு என்பவரது வீட்டிற்கு உறவினர்களான தஞ்சையை சேர்ந்த திவ்யா, கடலூரை சேர்ந்த பிரவீன் மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோர் சென்றிருக்கின்றனர்.

 

இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று காலை ஊரை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது கண்ணப்பன் மகிமலையாறு தடுப்பணை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீன் கிருஷ்ணா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளனர்.

 

தகவலறிந்து வந்த பொதுமக்களும் மற்றும் தீயணைப்புத் துறையினரும் இரண்டு பேரின் உடலை மீட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply