--- --:--:-- --

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக வீட்டிலேயே சடலத்தை வைத்திருந்த சகோதரி..!

5

திண்டுக்கல்லில் இறந்த பெண் காவலர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக வீட்டிலேயே சடலத்தை வைத்து உள்ளதாக அவரது சகோதரி மற்றும் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் நந்தவனப்பட்டி காலனியில் வசித்து வருபவர் இவர்.

 

திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். கணவரை விட்டுபிரிந்த அன்னை இந்திரா மூத்த சகோதரி மற்றும் குடும்ப நண்பரான பாதிரியார் சுதர்சன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

 

மருத்துவ விடுப்பில் சென்று அன்னை இந்திரா மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் சக பெண் காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது பெண் காவலர் இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்த பொழுது உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது.

 

விசாரணையில் இந்திராணி தகவல் தெரிந்ததும் அவர் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் அவரது சகோதரியும் பாதிரியாரும் பிரார்த்தனை செய்து வந்தது தெரியவந்தது. உடல் அழுகி விட்டதால் வீட்டில் வைத்தே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவரது சகோதரி மற்றும் பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon