--- --:--:-- --

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்தவரின் செல்போனை பறித்த குரங்கு..!

3

சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த தொழிலாளி ஒருவரின் செல்போனை அங்கிருந்த குரங்கு ஒன்று எடுத்துச் சென்றதில் போன் பழுதடைந்தது. உணவு தேடி நகருக்குள் வரும் குரங்குகள் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.

 

இந்த நிலையில் விக்னேஷ் என்பவர் தனது செல்போனை கையில் வைத்திருந்த போது திடீரென குரங்கு ஒன்று செல்போனை எடுத்து சென்றது. மொட்டை மாடிக்கு சென்ற அந்த குரங்கு செல்போனை விடாமல் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஓடியது.

 

பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு செல்போனை வீசிச் சென்றது. ஆனால் செல்போன் பழுதானது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon