நடிகை கங்கனா ரனாவத் சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்தது கடுமையான விதிமீறல்..!

டிகை கங்கனா ரனாவத் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளை ஒன்றிணைத்து சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்தது கடுமையான விதி மீறலாகும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மும்பையில் கார் எனும் இடத்தில் உள்ள 16 மாடி கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். இந்த மூன்று வீடுகளிலும் சுவர்களை இடித்து ஒன்றாக இணைத்ததற்காக அவருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

முன்பிருந்த திட்டப்படி வீட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும் என்று கூறி மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கட்டடத்தில் அனைவருக்கும் பொதுவான பரப்புகளை இணைத்து வீடாக மாற்றியது கடுமையான விதி மீறலாகும் எனக்கூறி தள்ளுபடி செய்தார்.


Leave a Reply