--- --:--:-- --

கோவை : பெஸ்ட் குழுமங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தடாகம் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்,சோதனை சாவடியினை எஸ்.பி. அருளரசு துவக்கி வைத்தார் !!!

11.1

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூரில் மாவட்ட காவல்துறை சார்பில் நவீன காவல் துறை கண்காணிப்பு மையம் தொடக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பெஸ்ட் குழும நிறுவன தலைமை நிர்வாகி அரிமா வரவேற்று ராம் ரமணன் பேசினார் . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு 32 நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன காவல்துறை சோதனை சாவடியை திறந்துவைத்தார் .

 

எஸ்.பி.அருளரசு பேசுகையில் பெஸ்ட் குழும நிறுவனம் சமூக சேவையில் ஈடுபட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் இந்த நவீன கண்காணிப்பு காவல் மையத்தை அமைத்து தந்து உள்ளது.இதுபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும், நவீன சோதனை சாவடிகளையும் அமைப்பதன் மூலம் சமூகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

 

பெஸ்ட் குழும நிறுவனங்களின் தலைவர் DR.ஸ்ரீபிரியா கௌரிசங்கர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் .பெஸ்ட் குழும நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்கி னார்.

 

பெரிய நாயக்கன் பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம்,காவல் உதவி ஆய்வாளர்கள் தாமோதரன் , செந்தில்குமார் , குப்புராஜ் மனோகரன் , சந்திரகுமார் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon