விவசாயிகளுக்கு ஆதரவாக 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த பெண்..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்திய விவசாயிகளுக்கு  ஆதரவாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்வது கவனத்தைப் பெற்றுள்ளது.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இளம்பெண் சப்போட்டிங் இந்தியன் பார்மர்ஸ் பிரோடெஸ்டிங் என்ற வாசகத்துடன் ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.


Leave a Reply