கரூர் அருகே மகன் உயிருடன் இந்த செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அடுத்த கொஞ்சம் பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மகன் பாலாஜி. இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பாலாஜி அவளது வீட்டில் பழுதடைந்து இருந்த ஸ்பீக்கர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தாக கூறப்படுகிறது. அப்போது பாலாஜியின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட சிறுவனின் தந்தை செல்ல முத்து அதிர்ச்சியடைந்து நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இருவரது உடலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.