சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் பாஜகவில் இணைந்து விலகிய சம்பவம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்திய நபர் பாரதிய ஜனதாவில் இணைந்த சில மணிநேரங்களிலேயே நீக்கப்பட்டார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

 

அப்போது கூட்டத்தின் இடையே வந்த கபில் என்கிற நபர் வானத்தை நோக்கி 2 முறை சுட்டு பதற்றத்தை அதிகரித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் நேற்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துள்ளார்.

 

பாஜக நிர்வாகி ஒருவர் கபில் குஜாரை அவரை வரவேற்றுக் கௌரவிக்கும் படங்களும் வெளியாகின. பின்னர் சில மணிநேரங்களிலேயே கபில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி மேலிடம் அறிவித்தது. அவரது பின்னணியை அறியாமல் கட்சியில் சேர்த்து விட்டதாகவும் விளக்கம் அளித்தது.


Leave a Reply