தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பொது முடக்கம் ஜனவரி 31ஆம் தேதி நீட்டிப்பு..!

மிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள போதும் பொது முடக்கம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வந்த சூழலில் அனைத்து தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரங்குகளில் அதிகபட்சமாக 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கக் கூடிய வகையில் சமுதாய அரசியல் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார கல்வி மற்றும் அதன் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்டங்கள் நடத்த வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதனோடு சேர்த்து முக்கிய அறிவிப்பாக காணும் பொங்கல் அன்று கடற்கரையில் அளவுக்கதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய தினம் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply