கோவை : மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்.அரசால் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கனில் அதிமுக விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனுமதியின்றி முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கானடோக்கனில் அதிமுக விளம்பரம் செய்வதாக குற்றஞ்சாட்டி முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது,அவர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பொருட்களை நியாயமான முறையில் வழங்க வேண்டும் எனவும்,அதிமுகவினர் கட்சி ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களிடம் கொடுத்து வருவதாகவும்அரசால் வழங்கப்படும் பொருட்களை ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர்,போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவே கலைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், பையாக்கவுண்டர்,மருதமலை சேனாதிபதி,தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுகவினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply