பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரொனா..!

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரொனா தொற்று உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உருமாறிய கொரொனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

 

மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு தொற்று உறுதியானது.

 

இந்த கொரொனா மாதிரிகள் அனைத்தும் கொல்கத்தா, புவனேஸ்வர், புனே, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 6 பேருக்கு உருமாறிய கொரொனா தொற்று தற்போது உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

தொற்று உறுதியான ஆறுபேரும் தனி அறைகளில் வைத்து கண்காணித்து வருவதாகவும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

 

நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மாநில அரசுகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Leave a Reply