துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

ர்நாடக மாநில சட்ட மேலவையில் துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில மேலவையின் துணை சபாநாயகர் இருந்து வந்தவர் தர்மே கவுடா.

 

முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா கட்சியை சேர்ந்தவர் தர்மே கவுடா. இந்நிலையில் கடவூர் தாலுகா மங்கேநகள்ளி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக தர்மே கவுடா சடலமாக கிடந்துள்ளார்.

 

சம்பவம் அறிந்து வந்த போலீசார் அவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 15ம் தேதி சட்ட மேலவையில் சபாநாயகர் இருக்கையில் தர்மேகவுடா அமர்ந்தபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இதனால் அவமானம் தாங்க முடியாமல் தான் தர்மே கவுடா தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.


Leave a Reply