கோவையில் துணிகரம்.20 பவுன் நகை,2 லட்சம் பணம் திருட்டு.போலீசார் விசாரணை !!!

கோவை கோவில்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை பணம் திருடப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவில்பாளையம் காபி கடை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 56). மனைவி கவுசல்யா தனியார் நிறுவன ஊழியர். இவர்களுடைய மகன் சூரிய பிரபா.இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்.இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதனையடுத்து அவரை குடும்பத்தினர் சேரன் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சூரிய பிரபாவும்,அவரது கணவர் லோகநாதன் வீட்டில் வந்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

 

இதையடுத்து அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வைரம் மற்றும் பிளாட்டினம் மோதிரம், உட்பட 20 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் ஆகும்.

 

இதுகுறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் திருட்டு மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிடட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply